ஜப்பானுக்கான 49 விமான சேவைகளை இரத்து செய்த சீனா!
சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான 49 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
விமானத் தகவல் தளமான ஃபிளைட் மாஸ்டர் (Flight Master) நேற்று வெளியிட்ட தரவுகளுக்கு அமைய, பெப்ரவரி மாதத்திற்கான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி மாதத்தை விட அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீனாவின் மூன்று முக்கிய உள்நாட்டு விமான நிறுவனங்களான ஏர் சீனா, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் ஆகியவை நேற்று ஜப்பான் வழித்தடங்களில் டிக்கெட்டுகளுக்கான கையாளுதல் நடவடிக்கைகளை விவரிக்கும் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
இதன்கீழ், , ஜனவரி 26 அன்று நண்பகலுக்கு முன் வாங்கிய அல்லது மீண்டும் வெளியிடப்பட்ட தகுதியான டிக்கெட்டுகளை வைத்திருக்கும் பயணிகள் கட்டண வேறுபாடுகளுக்கு உட்பட்டு ஒரு இலவச மாற்றத்தைச் செய்யலாம் அல்லது பயன்படுத்தப்படாத பிரிவுகளுக்கு கட்டணமில்லா பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்.
ஜப்பானிய பிரதமர் சானே தகைச்சி (Sanae Takaichi) தைவான் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ள நிலையில், இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக ஜப்பானுக்கு செல்ல வேண்டாம் என சீன பிரஜைகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்படத்தக்கது.




