AI தொழிநுட்பம் இரட்டை முனைகள் கொண்ட வாள் என்கிறது சீனா!
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் நேற்றைய தினம் (18.07) செயற்கை நுண்ணறிவு குறித்த தனது முதல் கூட்டத்தை நடத்தியது.
பிரித்தானிய வெளியுறவுத் துறை செயலர் ஜேம்ஸ் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
15 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலுக்கு ஏ.ஐ குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், உயர்மட்ட AI ஸ்டார்ட்அப் ஆந்த்ரோபிக்கின் இணை நிறுவனர் ஜாக் கிளார்க் மற்றும் AI நெறிமுறைகள் மற்றும் ஆளுகைக்கான சீனா-இங்கிலாந்து ஆராய்ச்சி மையத்தின் இணை இயக்குநர் பேராசிரியர் ஜெங் யி ஆகியோர் விளக்கமளித்தனர்.
இதில் கலந்துகொண்டு பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இதன்படி சீனா, செயற்கை தொழிநுட்பம் ஓடும் குதிரையாக மாறக்கூடாது எனத் தெரிவித்தது. இரட்டை முனைகள் கொண்ட வாள்” என்று விவரித்தார் மேலும் AIக்கான வழிகாட்டும் கொள்கைகளை நிறுவுவதில் U.N இன் மைய ஒருங்கிணைப்புப் பங்கை பெய்ஜிங் ஆதரிக்கிறது எனவும் தெரிவித்தது.
அதேபோல், அமெரிக்கா மக்களை தணிகைச் செய்வதற்கோ, அல்லது அடக்குவதற்கும் இந்த தொழிநுட்பத்தை பயன்படுத்த கூடாது என எச்சரித்தது.
அத்துடன் காலநிலை மாற்றதை நிவர்த்தி செய்தல், பொருளாதாரங்களை மேம்படுத்துததல் உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்ளவேண்டிய தேவைகளுக்கு ஏ.ஐ உதவும் எனவும், ஆனால் ஆயுதங்கள் தேடல் உள்ளிட்ட தகவறான தகவல்களுக்கு உதவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“AI இன் இராணுவ மற்றும் இராணுவம் அல்லாத பயன்பாடுகள் இரண்டும் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்” என்று குட்டெரெஸ் கூறினார்.