சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபாஸ்டியன் விபத்தில் உயிரிழப்பு!
சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபாஸ்டியன் பினேரா ஹெலிகாப்படர் விபத்தில் நேற்று (06.02) உயிரிழந்தார்.
74 வயதான பினேரா 03 பேருடன் ஹெலிகாப்டரில் பயணித்த நிலையில், விபத்தில் சிக்கியுள்ளார்.
மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே முன்னாள் ஜனாதிபதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மற்ற மூன்று பயணிகள் உயிர் தப்பினர்.
அவருடைய மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், மூன்று நாள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
(Visited 17 times, 1 visits today)





