ஆஸ்திரேலியாவில் புதியவகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள்!
ஆஸ்திரேலியாவில் வாழும் மக்கள் புதிய வகை பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு வயதுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் நிமோகோகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா அல்லது நிமோகாக்கஸ் பாக்டீரியாவால் ஏற்படும் ஆபத்தான தொற்று ஆகும்.
குழந்தைகள் தொற்றுநோய்களால் அதிக ஆபத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அதிகாரிகள் தற்போது இரண்டு வயதுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. இது கடந்த 20 ஆண்டுகளை விட அதிகம் என அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.





