பிரித்தானியாவில் கக்குவான் இருமலால் பாதிக்கப்படும் குழந்தைகள் : பெற்றோர்களின் கவனத்திற்கு!
பிரித்தானிய மக்களுக்கு கக்குவான் இருமல் தொடர்பில் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
40 ஆண்டுகளில் இந்த இருமல் மிகப் பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
கக்குவான் இருமல் காரணமாக 05 குழந்தைகள் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
குறித்த இருமலால் முன்னதாக பாதிக்கப்படாதவர்கள் whooping cough jabs பெற அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அவசரமாக நடவடிக்கை எடுக்காவிட்டால், 40 ஆண்டுகளில் மிகப்பெரிய வெடிப்பை நாம் சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகளின் மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் மற்றும் இருமலின் போது “வூப்பிங்” சத்தம் உள்ளிட்ட அறிகுறிகளைக் கவனிக்கவும், அவசர மருத்துவ உதவியை நாடவும் பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





