இலங்கை

மோசமாக பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், வைத்தியசாலைக்குள் ஐந்து அடிக்கும் மேல் நீர் நிறைந்துள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தீவிர சிகிச்சைப்பிரிவு நோயாளிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் கொழும்பு மற்றும் புத்தளம் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், ஏனைய நோயாளிகள் வெள்ள நீர் ஓரளவு குறைந்தத நிலையில், கடற்படை மற்றும் இராணுவத்தின் உதவியுடன் வாரியபொல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

வைத்தியசாலை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் மீண்டும் திறக்க வாய்ப்புள்ளதாகவும், அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று கூற முடியாது என்பதனால், மறு அறிவித்தல் வரும் வரை எந்தவொரு நோயாளியையும் சிலாபம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும் வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!