சென்னை – பால்கனியிலிருந்து தவறிவிழுந்த குழந்தை… போராடி மீட்ட மக்கள்!
சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பால்கனியிலிருந்து தவறி விழுந்த குழந்தையை அங்கிருந்த பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்த பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போரூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனியில் ஒரு வயதுடைய குழந்தை இன்று தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குடியிருப்பின் இரண்டாவது மாடியின் பால் கனியில் இருந்து தாவி குழந்தை ஒன்று சன் சைடில் விழுந்துள்ளது. அந்த வீட்டில் உள்ளவர்கள் யாரும் வீடியோவில் காணப்படவில்லை. பால் கனியில் இருந்து தாவி குழந்தை சன் சைடில் சரிந்தபடி கீழே வந்துள்ளது.
இதைக் கண்டு எதிரே உள்ள குடியிருப்பில் இருந்தவர்கள் பார்த்து கூச்சல் போட்டனர். பின்னர், சத்தம் கேட்டு அங்கு கூடிய இளைஞர்கள் குழந்தையை பாகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினர்.
கரணம் தப்பினால் மரணம் என்பதை அறியாமல் அந்தக் குழந்தை, தனக்கே உரித்தான சுட்டித்தனத்துடன் விளையாடிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் குழந்தை மேற்கூரையில் லேசாக சறுக்கியது. அதைக் கண்ட பெண்கள் அச்சத்தில் கூச்சல் இட்டனர். அதுவரை சாந்தமாக இருந்த குழந்தை அழத்தொடங்கியது. அதேவேளையில், ஜன்னல் வழியாக ஏறி குழந்தையை மீட்கும் பணியில் இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டனர்.
முதலில் துணி கொண்டு வந்து குழந்தையை பிடிக்க முயன்று உள்ளனர். அதன்பின் பெரிய ஜமுக்காளம் கொண்டு வந்து குழந்தை கீழ் விழுந்ததும் அதை பிடிக்க முயன்று உள்ளனர். இந்த நேரத்தில் குழந்தை சரசரவென கீழே விழும்படி வந்துள்ளது.
இந்த சூழலில், கீழ் வீட்டின் ஜன்னல் வழியாக மேலே ஏறிய இளைஞர், குழந்தையை ஒற்றைக் கையில் லாவகமாக பிடித்து தூக்கி காப்பாற்றினர். இதனால், அந்த குழந்தை நல்வாய்ப்பாக நூழிலையில் உயிர் தப்பியது. அதன் பின்னர் தான் அங்கிருந்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் இது யாருடிய குழந்தை எனும் விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை. நெஞ்சை பதற வைத்த இந்த வீடியோ காட்சிகள் இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.