இந்தியா விளையாட்டு

IPL தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த சென்னை வீரர் ராயுடு

ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு, இந்த சீசன் தான் தான் விளையாடும் கடைசி தொடர் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ராயுடு வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இதுதான் எனது கடைசி ஐபிஎல் தொடர். மும்பை மற்றும் சென்னை என்று 2 சிறந்த அணிகள், 204 போட்டிகள், 14 சீசன்கள், 11 பிளே ஆப்கள், 8 இறுதிப் போட்டிகள், 5 கோப்பைகள்.

இது ஒரு நல்ல பயணம். இன்று இரவு நடக்கும் இறுதிப் போட்டி ஐபிஎல்லில் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று நான் முடிவு செய்துள்ளேன். நான் உண்மையிலேயே இந்த சிறந்த போட்டியை விளையாடி மகிழ்ந்தேன். அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

அம்பத்தி ராயுடு 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், 2018க்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

அவர் இதுவரை 203 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4,329 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 28.29 ஆக உள்ளது.

அவரது ஸ்ட்ரைக் ரேட் 127.29 ஆக உள்ளது. அவருடைய அதிகபட்ச ரன்களாக ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்துள்ளார்.

(Visited 17 times, 1 visits today)

KP

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே