இந்தியா: நீதிமன்றத்தில் முன்னிலையானார் சவுக்கு சங்கர்!

கஞ்சா வைத்திருந்ததாக தேனியில் வைத்து, கைது செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு காவல் துறை விசாரணைக்கு அனுமதி கோரி போலீசாரும், இந்த வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கரும் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச் செல்வன் முன்பு சவுக்கு சங்கர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
பெண் காவலர்கள் பாதுகாப்புடன் கோவை சிறையிலிருந்து சவுக்கு சங்கர் மதுரை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, ஆஜர்படுத்தப்பட்டார்.
போலீஸ் கஸ்டடி கோருவதால் மருத்துவப் பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்று வர நீதிபதி செங்கமலச் செல்வன் உத்தரவிட்டதை தொடர்ந்து, சவுக்கு சங்கரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குப் பாதுகாப்பாக, போலீசார் அழைத்துச் சென்றனர்.
(Visited 18 times, 1 visits today)