ஆஸ்திரேலியாவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரிக்கும் கட்டணம்

14 ஆண்டுகளுக்குப் பிறகு, சிட்னி துறைமுகப் பாலத்தின் மீது பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் வெள்ளிக்கிழமை, அக்டோபர் 29ஆம் திகதி முதல் சாலைக் கட்டணம் 6.8 சதவீதத்தால் அதிகரிக்கப்படும்.
வார நாட்களில் காலை 06.30 மணி முதல் 09.30 மணி மற்றும் மாலை 04.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை வசூலிக்கப்படும் கட்டணம் 04 அமெரிக்க டொலரிலிருந்து 04.27 அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆஃப்-பீக் டோல் 3.20 டொலரில் இருந்து 3.20 டொலராகவும் இரவு நேர கட்டணம் 2.50 டொலரில் இருந்து 2.67 டொலராகவும் அதிகரிக்கும்.
நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கம், கூடுதல் வருவாய் 720,000 ஓட்டுநர்களுக்கு வாரத்திற்கு அதிகபட்சமாக 60 டொலர் கட்டண நிவாரணம் வழங்குவதாகக் கூறியது.
(Visited 12 times, 1 visits today)