இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சனல் 4 காணொளி: பிள்ளையானிடம் CID விசாரணை

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கடந்த ஆண்டு வெளியான சனல் 4 ஆவணப்படத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பிரித்தானிய சேனலுக்கு ஆசாத் மௌலானா வழங்கிய அறிக்கைகளைக் குறிப்பிட்டு, பொது பாதுகாப்பு அமைச்சில் அமைப்பு ஒன்று தாக்கல் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஆவணப்படத்தின் கூற்றுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாளை (12) குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனை உறுதிப்படுத்தினார்.

TJenitha

About Author

You may also like

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கைக்கு இந்தியா வழங்கிய மகிழ்ச்சியான செய்தி – 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

  • October 5, 2024
இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

2 வாரங்களை சிறப்பாக பயன்படுத்திய அனுரகுமார – எரிக்சொல்ஹெய்ம் பாராட்டு

  • October 5, 2024
இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன
error: Content is protected !!