இலங்கையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
இலங்கையில் எதிர்வரும் 10 ஆம் ,11 ஆம் திகதிகளில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை தற்காலிகமாக மாற்றமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும்.
நாட்டின் பல இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.





