ஒரு மாதத்திற்கு குளிர் பானங்களை கைவிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
சாப்பிட்ட பிறகு குளிர் பானங்களை குடிக்கும் பழக்கம் உள்ளதா? முதலில் அதை கைவிடுங்கள். இந்நிலையில் ஒரு மாதம் முழுவதும் குளிர் பானங்களை நிறுத்தினால் என்ன நடைபெறும் என்பதை தெரிந்துகொள்வோம்.
இதை நாம் செய்தால் நமது உடல் எடை குறையும், வரட்சி ஏற்படாது, ஜீரணத்திலும் மாற்றம் ஏற்படும். இந்நிலையில் அடிக்கடி பசி எடுக்கும் தன்மை குறையும். குறிப்பாக காப்பைன், சர்க்கரையை எடுத்துகொள்ளும் அளவு குறைவதால் இந்த மாற்றம் ஏற்படும்.
மேலும் உடலின் வெப்ப நிலையிலும் மாற்றம் ஏற்படும். குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை பாதிக்காது. கெட்ட பேக்டீரியாவை வளர விடாது.
குளிர் பானங்களை குடிப்பதால் பற்களில் உள்ள எனாமல் அரித்துவிடும். இந்நிலையில் குளிர் பானங்களை குறைத்துக்கொண்டால், ஒட்டு மொத்தமாக எடுத்துக்கொள்ளும் கலோரிகளின் அளவு குறைந்து உடல் எடை குறையும். சர்க்கரை நோய் அல்லது சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு உள்ளவர்கள் குளிர்பானங்களை குறைவாக குடித்தால், இன்சுலின் செயல்பாடு அதிகரிக்கும்.
உங்கள் சருமம் வரட்சியடையாது, பருக்கள் ஏற்படாது. உடலில் அதிக சக்தி இருக்கும். உங்கள் மனநிலை சீராக இருக்கம். மேலும் நல்ல மனநிலையை ஏற்படுத்தும். இதனால் நல்ல தூக்கம் ஏற்படுத்தும்.
இந்நிலையில் உடல் எடை அதிகம் உள்ளவர்கள், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், சுகர் நோய் உள்ளவர்கள் மற்றும் ஏற்படும் வாய்புகள் உள்ளவர்கள் குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும்.