இலங்கையில் சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது.
இந்த நிலையில், சீமெந்து உள்ளிட்ட கட்டட நிரமாணத்துறைசார் பொருட்களின் விலை, 25 சதவீதத்தினால் குறைவடைய வேண்டும் என நிரமாணத்தறை வல்லுனர்கள் சபையின் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
விலை குறைக்கப்படாதுள்ளமையால், உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் பாரிய அளவில் இலாபம் ஈட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விலை அதிகரிப்பின் காரணமாக, தரமற்ற கம்பிகள் மற்றும் வர்ணப் பூச்சுகள் என்பன சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 18 times, 1 visits today)