கனடாவில் வீட்டு வாடகை தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கனடாவின் சராசரி வீட்டு வாடகைத் தொகை வீதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் முன்னணி வீட்டுமனை இணைய நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வருடாந்த அறிக்கையுடன் ஒப்பிடும்போது வீட்டு உரிமையாளர்கள் ஆரம்பத்தில் கோரும் வீட்டு வாடகைத் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டின் பின்னர் வீட்டு வாடகைத் தொகை அதிகளவில் வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பமாகக் கடந்த ஜூன் மாதம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் சராசரி வாடகைத் தொகையில் வீழ்ச்சி பதிவானது. இந்த நிலையில், கனடாவில் வாடகை வீடுகளைத் தேடுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 23 times, 1 visits today)