உலக சந்தையில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம் – நிபுணர்கள் வெளியிட்டுள்ள தகவல்
உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சாதகமான நிலைப்பாடு காரணமாக தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா – சீனாவுக்கு இடையிலான வர்த்தக போரில் சாதகமான இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் பாரிய அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.
சீனாவுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் அதிகரித்த வரியை அறிமுகம் செய்யவுள்ளதாக வெளியான அறிவிப்பை அடுத்து இந்த மாற்றம் ஏற்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வந்து சாதகமான இணக்கங்களை இரு நாட்டு அதிகாரிகளும் எட்டியுள்ளனர்.
இந்த மாற்றம் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களின் முதலீடுகளை பல வர்த்தக நடவடிக்கையில் முதலீடு செய்துள்ளனர்.
இதன் காரணமாக தங்கத்தின் மீதான கேள்வி குறைந்துள்ளதால், சடுதியாக தங்கத்தின் விலைகள் குறைந்துள்ளதாக Capital Economics என்ற நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் தங்க விலைகளில் ஏற்றமோ இறக்கமோ ஏற்பட்டாலும், அதன் மாற்றம் 10 வீதத்திற்கும் குறைவாகவே உள்ளதாக சில பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





