இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளால் ஏற்பட்டுள்ள மாற்றம் – பிட்ச் ரேட்டிங் தகவல்

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள், நிதிக்கொள்கை திசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தேர்தலின் முடிவுகள், நிதிக்கொள்கை திசையில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி இருப்பதாக சர்வதேச தரப்படுத்தல் நிறுவகமான பிட்ச் ரேட்டிங் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக வெளிநாட்டு நாணய கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்ட இணக்கப்பாடு என்பவற்றில் தாமதம் ஏற்படலாம் என்றும் பிட்ச் ரேட்டிங் தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பான தெளிவினை, நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.
அண்மையில் சீனா மற்றும் வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுடனான இணக்கப்பாடு, இலங்கையின் முன்னேற்றத்தைக் காண்பிக்கிறது என்றும் பிட்ச் ரேட்டிங் தெரிவித்துள்ளது.
(Visited 60 times, 1 visits today)