பொழுதுபோக்கு

வேட்டையன் ராஜா வரார்… ராகவா லாரன்ஸ் புதிய அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கிய இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

மேலும் ஜோதிகா, மாளவிகா, வடிவேலு, நாசர், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் சாதனை படைத்ததோடு வசூலையும் வாரிக்குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருந்தார்.

தற்போது 18 ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி உள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வேட்டையன் ராஜாவாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார்.

பி.வாசு தான் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார். இதில் சந்திரமுகியாக நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், லட்சுமிமேனன், வடிவேலு, மகிமா நம்பியார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் மரகதமணி இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான பின்னணி பணிகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சந்திரமுகி 2 படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் வேட்டையன் ராஜாவாக நடித்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (ஜூலை 31) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

ரஜினியை போல் ராகவா லாரன்ஸும் மாஸான லுக்கில் வருவாரா என்பதைக் காண ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.

https://twitter.com/offl_Lawrence/status/1685541225066045440?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1685541225066045440%7Ctwgr%5E9031eaac96df57ff32861bd0c38c3e41b127f0b1%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fstatic.asianetnews.com%2Ftwitter-iframe%2Fshow.html%3Furl%3Dhttps%3A%2F%2Ftwitter.com%2Foffl_Lawrence%2Fstatus%2F1685541225066045440%3Fref_src%3Dtwsrc5Etfw

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!