சாணக்கியன் இனவாதி: அக்மீமன தேரர் குற்றச்சாட்டு!
இலங்கை தமிழரசுக் கட்சியின் ITAK நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இனவாதியென முத்திரைக் குத்தியுள்ளார் லங்கா மக்கள் கட்சி தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் Akmeemana Dayarathana Thero.
கொழும்பில் இன்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு முத்திரை குத்தினார்.
யாழில் நடைபெற்ற பொங்கல் விழாவின்போது ஜனாதிபதி ஆற்றிய உரைக்கு தென்னிலங்கையில் கடும்போக்குடைய சிங்கள தேசிய வாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
எனினும், ஜனாதிபதியின் மேற்படி உரையை நாடாளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி. நேற்று வரவேற்றார்.
இந்நிலையிலேயே அக்மீமன தயாரத்ன தேரர், சாணக்கியனுக்கு இனவாத முத்திரை குத்தியுள்ளார்.
“ சாணக்கியன் போன்ற இனவாதிகளுக்கு தேவையான உரையை ஜனாதிபதி நிகழ்த்தியுள்ளார்.அதனால்தான் சாணக்கியன் அதனை நியாயப்படுத்தியுள்ளார்.
போர் காலத்தில் சாணக்கியன், சம்பந்தன் போன்றவர்கள் கொழும்பிலேயே இருந்தனர்.” – எனவும் தேரர் குறிப்பிட்டார்.





