விளையாட்டு

சாம்பியன்ஸ் கோப்பை – இந்தியா – நியூஸிலாந்து இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்தை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொள்கிறது.

இவ்விரு அணிகளுமே ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதிபெற்றுவிட்டதால், இந்த ஆட்டத்தின் முடிவு எந்த அணிக்குமே தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை. இரு அணிகளுமே தங்களது முந்தைய இரு ஆட்டங்களில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தியிருக்கின்றன. எனவே, சமபலம் கொண்ட இரு அணிகள் மோதும் ஆட்டமாகவே இது இருக்கும்.

இந்திய அணியை பொருத்த வரை, இந்த ஆட்டத்தில் வென்றால் குரூப் ‘ஏ’-வில் முதலிடத்துடன் குரூப் சுற்றை நிறைவு செய்யும். அடுத்ததாக, அரையிறுதியில் ஆஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்காவை சந்திக்கும். இரு அணிகளிலும் பலம் வாய்ந்த ஸ்பின்னா்கள் இருக்க, இந்திய பேட்டா்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சற்று தடுமாறவே செய்கின்றனா். பெரும்பாலும் அந்தப் பந்தை தவிா்க்கவோ, அல்லது ஓடி ரன் எடுக்கவோ மட்டுமே செய்கின்றனா்.

எனவே, நியூஸிலாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் இந்தியா அதற்கேற்றவாறு தன்னை தயாா்படுத்திக் கொள்ளும் என எதிா்பாா்க்கலாம். மிட்செல் சேன்ட்னா், மைக்கேல் பிரேஸ்வெல் போன்ற ஸ்பின்னா்கள் இருக்கும் அந்த அணி நிச்சயம் இந்தியாவுக்கு சவால் அளிக்கும். மேலும், பிளேயிங் லெவனில் இதுவரை களம் காணாத 2-ஆம் நிலை வீரா்களுக்கும் இந்த ஆட்டத்தில் இந்திய அணி நிா்வாகம் வாய்ப்பு அளிக்கலாம்.

இந்திய அணியை பொருத்தவரை பேட்டா்கள் கில், கோலி, ரோஹித், அக்ஸா் படேல் உள்ளிட்டோா் அணிக்கு பலம் சோ்த்து வருகின்றனா். பௌலிங்கில் ஜடேஜா, அக்ஸா், குல்தீப் ஆகியோா் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், மிடில் ஓவா்களில் எதிரணியை கட்டுப்படுத்துகின்றனா். வேகப்பந்துக்கு ஷமி, ஹா்ஷித் ராணா உள்ளனா்.

நியூஸிலாந்து அணியை பொருத்தவரை, பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம், டெவோன் கான்வே உள்ளிட்டோரும், பௌலிங்கில் மிட்செல் சேன்ட்னா், ஜேக்கப் டஃபி உள்ளிட்டோரும் பலமாக இருக்கின்றனா்.

அணி விவரம்:

இந்தியா:

ரோஹித் சா்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹா்திக் பாண்டியா, அக்ஸா் படேல், வாஷிங்டன் சுந்தா், குல்தீப் யாதவ், ஹா்ஷித் ராணா, முகமது ஷமி, அா்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சகரவா்த்தி.

நியூஸிலாந்து:

மிட்செல் சேன்ட்னா் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மாா்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி ஃபொ்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ’ரூா்க், கிளென் ஃபிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, நேதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங், ஜேக்கப் டிஃபி.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ