போர் பதற்றங்களுக்கு மத்தியில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து விவாதிக்க, நாளை ( 25) மாலை 05 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
உலகளாவிய ரீதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் தற்காப்புத் தயார் நிலையை ஆய்வு செய்வதற்காக
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முப்படைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, டிஆர்டிஓ அமைப்பின் தலைவர் சமீர் காமத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,
“மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை மிகுந்த கவலையளிக்கிறது. 03 வாரங்களுக்கும் மேலாக பிரச்சினை நீடிக்கிறது. இதனால் சர்வதேச பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய போரால் நமது நாட்டில் பல்வேறு சவால்கள் எழுந்துள்ளன.
போரின் எதிர்விளைவாக உலகின் மிக முக்கிய கடல்வழி போக்குவரத்து முடங்கியிருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய்,
எரிவாயு போக்குவரத்து மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர்.
அவர்களின் பாதுகாப்பில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளின் சரக்கு கப்பல்களில் இந்தியர்கள் பெரும்பான்மையாக பணியாற்றி வருகின்றனர்.
ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய், எரிவாயு, உரங்கள் கொண்டுவரும் சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கியிருக்கிறது.
இப்போதைய இக்கட்டான காலத்திலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் சமையல் எரிவாயு தேவையில் 60 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
உள்நாட்டில் சமையல் சமையல் எரிவாயு உற்பத்தி அதிகரிக்கப்பட்டு ள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் காஸ், உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது” என்றார்.





