போர் நிறுத்தம் – அமெரிக்காவின் 28 அம்ச பரிந்துரைகளை ஏற்கும் உக்ரைன்!
அமெரிக்கா முன்மொழிந்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைன் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளை மாளிகையுடன் ‘பொதுவான புரிதல்’ எட்டப்பட்டதாக உக்ரைனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ருஸ்டெம் உமெரோவ் (Rustem Umerov) கூறியதை தொடர்ந்து அமெரிக்க அதிகாரி ஒருவர் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் (Donald Trump) ஒப்பந்தத்தை இறுதி செய்ய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) விரைவில் அமெரிக்காவிற்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா முன்வைத்துள்ள 28 அம்ச கோரிக்கைகள் ரஷ்யாவிற்கு சாதகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் உக்ரைன் இந்த திட்டங்களை ஏற்றுக்கொள்ளுமா என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது. அதேநேரம் ஐரோப்பிய தலைவர்கள் இவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் நான்கு ஆண்டுகால போரை நிறைவுக்குக் கொண்டுவரும் முதல்படியாக இந்த திட்டத்திற்கு உக்ரைன் இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது.




