காசாவில் நடைமுறைக்கு வந்த போர் நிறுத்தம் – தரையிறக்கப்படும் அமெரிக்க துருப்புக்கள்
காசாவில் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அங்கு போர் தணிந்து அமைதி நிலவுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான நடவடிக்கை காரணமாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளன.
இந்நிலையில் நேற்று முதல் காசாவில் போர் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாலஸ்தீன மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
போர் நிறுத்த நடவடிக்கையில் மத்தியஸ்த நாடுகளாக கட்டார், எகிப்து, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் செயற்பட்டன.
அமெரிக்கா முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை ஏற்று இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு உடன்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இடம்பெயர்ந்து வேறு பகுதிகளில் வசித்து வந்தவர்கள், தமது சொந்த இடங்களுக்கு திரும்பி வழமை நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
இதேவேளை காசாவில் அமெரிக்க துருப்புக்களை நிலைநிறுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பேர் நிறுத்த செயற்பாடுகளை கண்காணிக்கும் வகையில் சுமார் 200 அமெரிக்க இராணுவத்தினர் காசாவுக்கு அனுப்பப்படவுள்ளதாக வெள்ளை மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





