ஐரோப்பா செய்தி

நெதர்லாந்தில் 3,000 கார்களுடன் தீ பற்றி எரிந்த சரக்கு கப்பல்

நெதர்லாந்தின் வடக்கு கடற்பரப்பில் சுமார் மூவாயிரம் கார்களை ஏற்றிச்சென்ற சரக்கு கப்பல் இன்று காலை திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.

இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதுடன்,கப்பலில் ஏற்றிச்செல்லப்பட்ட மூவாயிரம் கார்களுக்கும் சேதம் ஏற்பட்டிருப்பதாக நெதர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

மேலும் இந்த கப்பலில் பணியில் ஈடுப்பட்டிருந்த 16 ஊழியர்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ பரவலையடுத்து படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக நெதர்லாந்தின் கடலோர பொலிஸ் செய்தித் தொடர்பாளர் லியா வெர்ஸ்டீக் தெரிவிக்கிறார்.

குறித்த சரக்கு கப்பல், ஜேர்மனியின் துறைமுகமான ப்ரெமனில் இருந்து எகிப்தில் உள்ள போர்ட் சைட் துறைமுகத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தபோது, டச்சு தீவான அமலாண்டிற்கு வடக்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் திடீரென தீப்பிடித்துள்ளது.

இந்த சரக்கு கப்பலில் 2,857 கார்களும், 25 மின்சார கார்களும் இருந்தன.அவற்றுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!