ஆஸ்திரேலியாவில் கார் பந்தயத்தில் ஏற்பட்ட அனர்த்தம் – ஆபத்தான நிலையில் மூவர்!
ஆஸ்திரேலியாவில் கார் பந்தயத்தின்போது ஏற்பட்ட விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
வால்ச்சா (Walcha) நகரில் நேற்று இரவு நடைபெற்ற வருடாந்திர கார் பந்தயத்தின் போது விபத்து நிகழ்ந்துள்ளது.
பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று சாலையை விட்டு விலகி பார்வையாளர்கள் குழு மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த 13 பேரில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
(Visited 3 times, 3 visits today)





