ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்தில் பற்றி எரிந்த கார் – வைரலாகும் காணொளி!
ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்தின் முனையம் 5 க்கு வெளியே கார் ஒன்று இன்று அதிகாலை தீப்பிடித்துள்ளது.
பற்றி எரியும் வாகனத்திலிருந்து கருமையான புகை வெளியேறும் காட்சிகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
ஹீத்ரோ விமான நிலைய குழுக்கள் விரைவாக செயற்பட்டு தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையம் இப்போது வழக்கம் போல் இயங்குகிறது என்று ஹீத்ரோ விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.





