புதுடில்லியில் காற்றில் புற்றுநோய் ஏற்படுத்தும் துகள்கள் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
புதுடில்லியில் புகைமூட்டம் காரணமாகப் பாடசாலைகளை நேரடியாக வகுப்புகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக இணையத்தில் வகுப்புகள் நடைபெறுகின்றன.
காற்றில் PM2.5 அளவிலான தூய்மைக்கேட்டுப் பொருட்கள், உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் அளவைவிட 57 மடங்கு அதிகமாக நேற்று பதிவாயின.
அவை நுரையீரல் வாயிலாக ரத்தத்தைச் சென்றடைந்து புற்றுநோயை ஏற்படுத்தும் துகள்கள். பரிந்துரைக்கப்படும் அளவைவிட இன்று அது 39 மடங்கு அதிகமாகப் பதிவாகியுள்ளது.
நகர் முழுவதையும் சாம்பல் நிறப் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. பிள்ளைகள் வீட்டில் இருந்தால் போக்குவரத்து குறையும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரில் பாடங்கள் நடத்தப்படும். விவசாயிகள் பயிர்களை எரிப்பது, தொழிற்சாலைகள், போக்குவரத்துக் காரணமாக ஏற்படும் நச்சுவாயு ஆகியவற்றால் ஒவ்வோர் ஆண்டும் டில்லியில் புகைமூட்டம் ஏற்படுகிறது.