தலைமையில் இருந்து விலகும் கனடா பிரதமர்

லிபரல் கட்சியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த வாரம் லிபரல் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கட்சிக் கூட்டத்திற்கு முன்னதாக அவர் பதவி விலகப் போவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், அவர் உடனடியாக கட்சியின் தலைமைப் பதவியை விட்டு விலகுவாரா அல்லது வாரிசு தெரிவு செய்யப்படும் வரை அந்த பதவியில் நீடிப்பாரா என்பது தொடர்பில் அவர் குறிப்பிட்ட கருத்தை வெளியிடவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 10 times, 1 visits today)