கனடாவின் காட்டுத்தீ அமெரிக்காவையும் பாதித்துள்ளது
மூன்று வாரங்களுக்கு முன்பு, கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் விளைவுகளால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வானம் செம்மஞ்சள் நிறத்தில் காடசியளித்துள்ளது.
கனடாவின் வரலாற்றில் மிக மோசமான அனுபவத்தைச் சேர்த்து, ஏற்கனவே கனடா முழுவதும் சுமார் 200 காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை அணைக்க முடியாத அளவுக்கு பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா மற்றும் அமெரிக்காவில் காட்டுத் தீயின் தாக்கத்தால் காற்றின் தரம் மீண்டும் மோசமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்கவும், குளிரூட்டிகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், வெளியில் பயணம் செய்யும் போது N95 முகமூடியைப் பயன்படுத்துவது பொருத்தமானது என்று கூறப்படுகிறது.
நேற்று, அமெரிக்காவின் சிகாகோ நகரில் காற்றின் தரம் மிகக் குறைந்த அளவில் இருந்ததால், அமெரிக்கா, மிச்சிகன், இண்டியானா, விஸ்கான்சின், டெலாவேர், மேரிலாந்து, நியூ ஆகிய மாநிலங்களில் 8 கோடி பேருக்கு அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான மக்கள் பாதிக்கப்படாவிட்டாலும், சுவாசக் கோளாறு உள்ளவர்கள் இந்த பாதகமான நிலைமையால் அதிகம் பாதிக்கப்படலாம் என்று நாட்டில் உள்ள சுகாதாரத் துறைகள் எச்சரித்துள்ளன.