சீனா மற்றும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்படும் கனடா – கவலையில் ட்ரம்ப்!
ஆர்க்டிக்கில் சீன மற்றும் ரஷ்ய ஆக்கிரமிப்புகளால் கனடா பாதிக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் இந்த கூற்று ‘டோன்ரோ கோட்பாட்டுடன்’ (Donroe Doctrine) ஒத்துப்போவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேற்கு அரைக்கோளம் முழுவதும் அமெரிக்காவின் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான ட்ரம்பின் பரந்த முயற்சிகளை மீளவும் சுட்டிக்காட்டும் வகையில் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
முன்னதாக ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவின் ஒருங்கிணைந்த மாநிலமாக மாற அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் தற்போது பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி கனடாவின் பிரதமர் மார்க் கார்னியுடன் (Mark Carney) இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையே கனடா பிரதமர் அண்மையில் சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார். இதன்போது இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.
இந்த விஜயம் ட்ரம்பின் எண்ணப்போக்கை மாற்றியிருக்கக்கூடும் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





