30 வினாடியில் பணக்காரராக முடியுமா? Spotify விளக்கம்
Spotify-யில் 30 வினாடி ஒலிப்பதிவைப் பதிவேற்றி மீண்டும் மீண்டும் தொடர்ந்து 24 மணி நேரத்திற்குக் கேட்டால் மாதந்தோறும் 1,200 டொலர் கிடைக்கும் என தகவல் ஒன்று பதிவாகி வருகின்றது.
ஆனால் Spotify நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் இதனை மறுத்தார்.
நிறுவனத்தின் காப்புரிமைத் தொகை அவ்வாறு செயல்படுவதில்லை என்று அவர் X (Twitter) சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்தார்.
பாடல்களை மீண்டும் மீண்டும் ஒலிபரப்பும் கருவிகள் குறித்துக் கவலை எழுந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒலிபரப்பு எண்ணிக்கையில் சுமார் 10 விழுக்காடு போலியானவை என்று JP Morgan நிர்வாகிகள் குறிப்பிட்டனர்.
பாடல்கள் எத்தனை முறை கேட்கப்படுகின்றன என்ற அடிப்படையில் கலைஞர்களுக்குப் பணம் அளிக்கப்படுவதில்லை என்று Spotify இணையப் பக்கம் கூறுகிறது.
பாடல்கள் எப்படிக் கேட்கப்படுகின்றன, கலைஞர்கள் செய்திருக்கும் ஒப்பந்தம் ஆகியவற்றைப் பொறுத்துதான் ஊதியம் வழங்கப்படுகின்றது.