இளஞ்சிவப்பு முட்டையை உட்கொள்ளலாமா? : பிள்ளைக்கு உணவு தயாரித்த தாயிற்கு காத்திருந்த அதிர்ச்சி!
இளஞ்சிவப்பு முட்டை பற்றிய விழிப்புணர்கள் சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசு பொருளாக மாறியுள்ளது.
தாயொருவர் தனது பிள்ளைகளுக்காக ஆம்லெட்டுக்களை தயார் செய்ய முட்டையை உடைத்த பொழுது அதன் மஞ்சள் கரு இளஞ்சிவப்பு நிறமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்நிலையில் அவர் மற்ற முட்டைகளையும் உடைத்து சோதனை செய்துள்ளார். ஆனால் முதலில் உடைக்கப்பட்ட அந்த ஒரு முட்டை மாத்திரமே இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்துள்ளது.
இது தொடர்பில் அறிவதற்காக அவர் அதனை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த புகைப்படம் பதிவேற்றப்பட்ட சிறிது நேரத்தில் அதனை பயன்படுத்த வேண்டாம், உட்கொள்ள வேண்டாம் என பலர் அறிவுறுத்தியுள்ளனர்.
மனிதர்களுக்கு கடுமையான நோய்க்கு வழிவகுக்கும் பாக்டீரியா காரணமாக முட்டை இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர்.