இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா? உடலில் ஏற்படும் மாற்றங்கள்

பிட்னஸ் ஆர்வலர்கள் மற்றும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் என பலர் வாழைப்பழத்தை தங்களது டயட்டில் சேர்த்துக் கொள்வர். இதில் புரதம், வைட்டமின் சத்துக்கள் உள்ளிட்ட பல உறுதி செய்யப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இந்தப் பழத்தில் பைபர், பொட்டாசியம், மக்னீசியம், கால்சிய சத்துக்கள் பல அடங்கி இருக்கின்றன. இதனால்தான் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை தங்களது டயட் அட்டவணையில் சேர்த்து கொள்கின்றனர். இது இருதய செயல்பாட்டிற்கு உதவுவதோடு குடல் இயக்கத்திற்கும் உதவுகிறது. இதனை பலர் பெரும்பாலும் இரவில் சாப்பிடுவது உண்டு. இதனால் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? இப்படி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
இரவில் சாப்பிடுவதால் ஏற்படும் மாற்றங்கள்..
ஆயுர்வேதத்தின் படி இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலில் சளி அதிகமாக கூறப்படுகிறது. இதனால் தொண்டை வலி தொண்டை அடைப்பு ஆகியவை ஏற்படுமாம். அது மட்டும் கிடையாது, வாழைப்பழம் ஒரு கனமான உணவு பொருளாகும். இதை இரவில் சாப்பிடுகையில் அது செரிமானம் ஆகாமல் போகலாம். இதனால் உறங்க செல்வதற்கு முன் இதை சாப்பிட்டு விட்டு சென்றால் வயிறு பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோர், இரவில் வாழைப்பழத்திடமிருந்து தள்ளி இருப்பது நல்லதாம். இதில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் சுவாச கோளாறு ஏற்பட்டு உறங்கவும் சிரமப்படுவோம் என கூறப்படுகிறது.
இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..
மக்னீசியம் அதிகம் நிறைந்த வாழைப்பழத்தை சாப்பிடுவதால், நமது மன அழுத்தத்தை அது குறைக்கும் என கூறப்படுகிறது. பல சமயங்களில் உடல் ஓய்வில்லாத தன்மை பெறும். அப்படி உணர்வு சமயத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் ரிலாக்ஸ் ஆகும் உணர்வீர்கள் சிலர் கூறுகின்றனர். இரவு உறங்க செல்வதற்கு முன் உடலில் இருக்கும் அழுத்தங்களை வெளியேற்றும் இந்த வாழைப்பழம் உதவுகிறது. இது நீங்கள் நன்றாக உணரவும் நீண்ட நேரம் தூக்கமின்மை இல்லாமல் இருக்கவும் வழி வகுக்குமாம். அதுமட்டுமல்ல நீங்கள் உறங்கும்போது, உங்கள் உடலில் இருக்கும் Gamma-Aminobutyric Acid (GABA) அளவை ஒழுங்குபடுத்தி, தூக்கம் சம்பந்தமான பிரச்சனைகளை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது.
இரவில் யாரெல்லாம் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது?
ஆய்வுகளின் படி, பலருக்கு வாழைப்பழம் சாப்பிட்ட பின்பு உடலில் இருக்கும் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதாக கூறப்படுகிறது. எனவே, சுகர் அதிகமாக இருப்பவர்கள் இரவில் வாழைப்பழம் சாப்பிடும் முன்பு மருத்துவ நிபுணரிடம் கேட்டுக்கொள்வது நன்று. அதே போல, ஏற்கனவே சளி, இருமல் பிரச்சனை இருப்பவர்கள், ஆஸ்துமா மற்றும் சைனஸ் நோயாளிகள் இதை சாப்பிடும் முன்பு தங்களின் மருத்துவர்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.