அறிந்திருக்க வேண்டியவை

வயதை குறைக்கலாம் – எலிகள் மீதான சோதனையில் 70 சதவிகிதம் வெற்றி

வயதைக் குறைக்க முடியுமா என்பது தொடர்பில் நடத்தப்பட்ட சோதனை 70 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வயதை குறைக்கும் பல ஆராய்ச்சிகள் தற்போதைய நவீன உலகில் ஏதேனும் ஒரு பகுதியில் அன்றாடும் நடைபெற்று வருகின்றன. முந்தைய காலங்களில்கூட 53 வயது பெண்ணின் திசுவை 23 வயதாக குறைக்கும் ஆராய்ச்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

தற்போது, மனிதரின் மரபணுவில் மாற்றம் கொண்டு வந்து உயிரியல் ரீதியாக உடல் உறுப்புகளின் வயதைக் குறைக்கும் ஆராய்ச்சியை கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பன்றிகளின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் மற்றும் நானோ துகள்களை எடுத்து வயதான எலிகளுக்கு செலுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ‘இ5’ எனப்படும் வயதைக் குறைக்கும் வயது எதிர்ப்பு சிகிச்சையானது கிட்டத்திட்ட 70 சதவிகிதம் வெற்றி அடைந்துள்ளது.

எலியின் மரபணுவில் நம்ப முடியாத அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதயம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளின் வயது பாதியாக குறைந்துள்ளது.

இந்த சோதனை மனிதர்கள் மீது நடத்தப்பட்டால் 80 வயது முதியவரை 26 வயது இளைஞராக மாற்ற முடியும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.
error: Content is protected !!