நீருக்கடியில் வாழ்ந்தால் இளமையான தோற்றம் மீளவும் கிடைக்குமா?
மூன்று மாதங்களாக கடலுக்கு வாழ்ந்த நபர் ஒருவர் வெளியே வரும்போது இளமையாக காட்சியளிப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நீங்கள் ஒரு கற்பனை செய்து பாருங்கள். உங்களுக்கு தற்போது ஒரு 50 வயதாகுகிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது உங்களுக்கு சப்மிரைன் ஒன்றில் மூன்று மாதங்கள் வசிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.
அப்படி நீங்கள் மூன்று மாதங்கள் வசித்து பின் வெளியே வரும்போது 10 வயது குறைந்து ஒரு இளமையான தோற்றத்தில் வருகிறீர்கள் என்றால் உங்களால் நம்ப முடியமா?
ஆனால் இந்த விடயம் உண்மையில் நடந்துள்ளது. ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் ஏறக்குறைய 93 நாட்கள் அட்லாண்டிக் கடல்லில் ஒரு சப்மிரைனில் வசித்து வந்துள்ளார்.
மனித உடலில் அழுத்தப்பட்ட சூழலில் நீருக்கடியில் வாழ்வதன் விளைவுகள் என்ன என்பது பற்றிய ஒரு அற்புதமான ஆய்வை அவர் மேற்கொண்டுள்ளார்.
இதற்கு முன்பதாக அவர் நீருக்கடியில் 73 நாட்கள் வசித்து சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் தற்போது அந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
மருத்துவ மதிப்பீடுகள், டிடூரியின் டெலோமியர்ஸ், குரோமோசோம்களின் முனைகளில் உள்ள டிஎன்ஏ வரை மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
வரது ஒட்டுமொத்த ஆரோக்கிய அளவீடுகள் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உட்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.