தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு

காலமான இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர் ரத்தன் டாடாவின் நல்லுடல் இறுதி அஞ்சலிக்காக மும்பையிலுள்ள தேசிய மேடைக்கலை நிலையத்தில் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகராஷ்டிர மாநில முதலமைச்சர் Eknath Shinde இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய நேரப்படி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அவரது நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தலாம் என ஷிண்டே தெரிவித்துள்ளார்.
அவரது மறைவையொட்டி மகராஷ்டிர மாநிலத்தில் இன்று நடைபெறவிருந்த அனைத்து அரசாங்க நிகழ்ச்சிகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அவருக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று ஷிண்டே குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த திரு ரத்தன் டாடா நீண்ட காலமாக உடல்நலமின்றி இருந்தார். மும்பையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்றிரவு காலமானார்.
(Visited 46 times, 1 visits today)