ஜார்க்கண்டில் திருமண விருந்தினர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 7 பேர் மரணம்
ஜார்க்கண்டின்(Jharkhand) லதேஹர்(Latehar) மாவட்டத்தில் திருமண விருந்தினர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் ஐந்து பெண்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மஹுவாதன்ர்(Mahuvadhar) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓர்சா பங்களாதாரா(Orsa Bangladhara) பள்ளத்தாக்கில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
“பேருந்து கவிழ்ந்து ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஏனைய இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்” என்று அதிகாரி குமார் கௌரவ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காயமடைந்த 60 பேர் மஹுவாதன்ர் சமூக சுகாதார மையத்திலும் 20க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் 35 வயது ரேஷாந்தி தேவி, 37 வயது பிரேமா தேவி, 45 வயது சீதா தேவி, 55 வயது சோனாமதி தேவி, 40 வயது சுக்னா பூயான் மற்றும் விஜய் பூயான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், லதேஹர் மருத்துவமனையில் இறந்த ஒரு பெண்ணை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





