கொலம்பியாவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – பலர் பலி!
வடக்கு கொலம்பியாவின் கிராமப்புறப் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பாறையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்தாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக துணை ஆளுநர் ஆண்ட்ரெஸ் ஜூலியன் (Andres Julian) உறுதிப்படுத்தியுள்ளார்.
விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கரீபியன் நகரமான டோலுவிலிருந்து (Tolu ) மெடலினுக்குப் (Medellin) பயணித்துக்கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக அவர் தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




