மத்தியப் பிரதேசத்தில் 55 யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – ஒருவர் மரணம்
மத்தியப் பிரதேசத்தின் பர்வானி(Barwani) மாவட்டத்தில் ‘நர்மதா பரிக்ரம'(Narmada Parikrama) யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார், 55 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தூர்(Indore) மற்றும் தார்(Dhar) மாவட்டங்களைச் சேர்ந்த 56 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, பைகூர்(Baigur ) கிராமத்திற்கு அருகே விபத்துக்குள்ளானதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களில் 15 பேர் சிகிச்சைக்காக பர்வானி(Barwani) மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், ஏனையோர் கெதியா(Khetia) ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





