இந்தியாவில் மண்ணுக்குள் புதைந்த பேருந்து – தொடரும் மீட்புப் பணி – அதிகாரிகள் வெளியிட்ட தகவல்
இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் மண் சரிவில் சிக்கிய பேருந்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
மேலும் மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
விபத்து நடந்தபோது பேருந்தில் 30 முதல் 35 பயணிகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை மூன்று பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று இந்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மலையின் பாரிய மண்மேடு பேருந்தின் மீது சரிந்து வீழ்ந்தமையினால் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த துயரச் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
https://x.com/IndianExpress/status/1975593374532124771





