செங்கடலில் பற்றி எரியும் கப்பல் : காணொளி வெளியிட்ட ஹுதி கிளர்ச்சியாளர்கள்!
செங்கடலில் பயணம் செய்யும் போது தாக்கப்பட்ட கிரேக்க எரிபொருள் டேங்கர் மீது ஹுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது குறித்த கப்பலில் சுமார் ஒரு மில்லியன் பீப்பாய்கள் எரிபொருள் கொண்டு செல்லப்பட்டது.
கப்பல் முதலில் ஆகஸ்ட் 21 அன்று ஹூதி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்டது, அதன் பிறகு பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஹூதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்ட காணொளியில், கப்பலில் வெடிபொருட்களை வைத்து ரிமோட் கண்ட்ரோலைப் பயன்படுத்தி கப்பலை எப்படி வெடிக்கச் செய்வது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய நடவடிக்கையை மேற்கொள்ள தனது அமைப்பு தயாராகி வருவதாகவும்.
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தலைவரினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய எதிரிக்கு எதிரான பதிலடிக்கான எங்கள் தயாரிப்புகளை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம், எதிரிகளை ஆச்சரியப்படுத்த தயாராக உள்ளோம் என்று ஹூதி தலைவர் அப்தெல்-மலேக் அல்-ஹூதி கூறியுள்ளார்.
கடந்த வாரம் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் குறித்து ஹுதி தலைவர் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.