ஐரோப்பா

60 ஆடம்பர வீடுகளில் திருட்டு – ஆஸ்திரேலியாவை உலுக்கிய அயர்லாந்து கொள்ளையர்கள்

மெல்போர்னில் 60 திருட்டுகளுடன் தொடர்புடைய மூன்று அயர்லாந்து பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் மெல்பேர்னில் 60 ஆடம்பர வீடுகளில் திருட்டுச் சம்பவங்களைச் செய்துள்ளதாகவும், திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி ஒரு மில்லியன் டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய மூன்று அயர்லாந்து பிரஜைகள் 19, 24 மற்றும் 25 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் 6 மாதங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளதாகவும் அதன் பின்னர் வீடுகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக Blackburn, Doncaster, Narre Warren, Hampton Park Narre Warren மற்றும் Templestowe ஆகிய பகுதிகளில் இவர்கள் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலான திருட்டு சம்பவங்கள், குடியிருப்பாளர்கள் வீட்டில் இருந்து வெளியூர் சென்றிருந்த வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் மிகவும் நுணுக்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் இல்லாத இடங்களை துப்புரவு திரவம் கொண்டு சுத்தம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் மெல்பேர்ன் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூவரும் இன்று மெல்பேர்ன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!