சிங்கப்பூரில் நடைபெற்ற பர்கர் சவால் – உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞன்
சிங்கப்பூரில் நடைபெற்ற 30 நிமிடங்களில் 7 பவுண்டு பர்கரைச் சாப்பிடும் சவாலினால் இளைஞனுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சவாலில் பங்கேற்ற பெயர் தெரியாத இளைஞன் அதனால் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக செய்தி நிறுவனம் தெரிவித்தது.
பர்கரைச் சாப்பிட்டதால் இளைஞனின் வயிறு அளவிற்கு மீறி விரிந்தது. அதனால் ஏற்பட்ட அடைப்பால் அவரால் 5 நாட்களுக்கு மலம் கழிக்க முடியவில்லை.
மருத்துவமனைக்குச் சென்ற பிறகே அது சரியானதாக தெரியவந்துள்ளது. CT scan பரிசோதனை மேற்கொண்டபோது செரிககாத சாப்பாடு இளைஞனின் வயிற்றில் நிறைய இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அது அவருடைய உடலுறுப்புகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியது. மருத்துவர்கள் நபரின் மூக்கு வழியாகக் குழாயைவிட்டு செரிக்காத உணவை வெளியேற்றினர்.
தற்போது அவருடைய உடல்நலம் தேறிவருவதாகக் கூறப்பட்டது.





