செய்தி விளையாட்டு

பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் பும்ரா முதலிடம்!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா, டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள டெஸ்ட் அணியின் பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தல் பட்டியலில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை பின்தள்ளி பும்ரா 870 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இதற்கமைய, இதுவரை முதலிடத்திலிருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 869 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

அதேநேரம் மூன்றாம் இடத்தில் அவுஸ்திரேலிய அணியின் ஜொஸ் ஹேசல்வூட்டும், 4ஆம் இடத்தில் அதே அணியைச் சேர்ந்த பெட் கம்மின்ஸூம் உள்ளனர்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் இலங்கை அணியின் பிரபாத் ஜயசூரிய ஒரு இடம் முன்னேறி 7ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!