தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுவதாக அறிவித்த பல்கேரியா ஜனாதிபதி
பல்கேரிய(Bulgaria) ஜனாதிபதி ருமென் ராடேவ்(Rumen Radev) பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
அரச தொலைக்காட்சி நேரலையில், இது ஜனாதிபதியாக தனது கடைசி உரை என்றும் விரைவில் முறையாக பதவி விலகுவதாகவும் ருமென் ராடேவ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், துணை ஜனாதிபதி இலியானா அயோடோவா(Ileana Iodova) மீதமுள்ள காலத்திற்கு ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ருமென் ராடேவ் ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்குவார் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் அவரது இந்த முடிவு வந்துள்ளது.





