2026 வரவு செலவுத் திட்டம் : 17 லட்சம் வரை வருமான வரி விலக்கு
இந்தியாவில் பொது வரவு செலவுத்திட்ட வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு 17 லட்சமாக ரூபா உயரும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட கூட்டத் தொடரில் பெப்ரவரி முதலாம் திகதி பொது வரவு செலவுத்திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த வரவு செலவுத்திட்டம் மீது நடுத்தர வர்க்கத்தினர் அதிக நம்பிக்கையுடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் பொது வரவு செலவுத்திட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சம்பளம் பெறுபவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்படி புதிய வரி விதிப்பு முறையின் கீழ் 12 லட்சம் ரூபா வரையிலான வருமானத்துக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரவிருக்கும் பொது பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பு முறையில் வரி செலுத்துவோருக்கு மேலும் பல சலுகைகள் வாய்ப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.





