இலங்கை – 2025ஆம் ஆண்டுக்கான செலவுத் திட்டம் (live)

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றில் முன்வைத்துள்ளார்.
அதற்கமைய,
*தற்போது உள்ள சுங்க சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு புதிய சுங்க சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
* வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை வணிக ஒத்துழைப்புக்குப் பயன்படுத்தவுள்ளோம்.
* முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வசதிகளை வழங்குதல்
* பசுமை தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த நடவடிக்கை.
* பொருளாதார சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை.
*அரசுக்குச் சொந்தமான நிலங்கள் உற்பத்தி பொருளாதார நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு விடப்படும்.
* நாட்டில் வர்த்தகம் செய்வதற்கான வசதியை மேம்படுத்துவோம்.
* வங்குரோத்து நிலை குறித்த சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்..
* பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்கான ஒப்புதல்களுடன் ‘அனைத்து சேவைகளும் ஒரே இடத்திலிருந்து’ என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டு வருகிறது.
* பொது-தனியார் கூட்டாண்மை தொடர்பான புதிய சட்டம்.
*டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த 3,000 ரூபாய் மில்லியன் ஒதுக்கீடு.
*பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன ‘Permit’ ம் கிடைக்காது… இந்த வருடம் வாகனமும் கிடைக்காது…
*கர்ப்பிணிப் தாய்மார்களுக்கு போசனையுள்ள உணவு வேளையொன்றை பெற்றுக் கொடுக்க மாதாந்த கொடுப்பனவு ஒன்று பெற்றுக் கொடுக்கப்படும் நிலையில், அதற்காக 7,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
*திரிபோஷ வேலைத்திட்டம் நிறுத்தப்படாது. திரிபோஷ வேலைத்திட்டத்திற்காக 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு…
* யாழ் நூலகத்திற்கு கணினி உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை பெற்றுக் கொடுக்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு..
* தோட்டப் புறங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மனித வளம், தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும்…
*2025 ஆம் ஆண்டு சுகாதார துறைக்கு 604 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு..
*இதில் மருந்து வழங்கல் மற்றும் சுகாதார வழங்கலை உறுதிப்படுத்துவதற்காக 185 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..
*மருத்து தட்டுப்பாடு ஏற்பட எவ்வித வாய்ப்புகளும் இல்லை.
*சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 500 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
*சுற்றுலாத் துறையை மேம்படுத்த டிஜிட்டல் டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்படும்.
*கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஸ்கேனிங் அமைப்பை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு. கொழும்பு துறைமுக கொள்கலன் நெரிசலை குறைக்க வேயங்கொடையில் உள்நாட்டு கொள்கலன் முற்றம் ஒன்று நிறுவப்படும். இதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு…
*டிஜிட்டல் பொருளாதார அதிகார சபை ஒன்றை நிறுவ நடவடிக்கை. டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைகளுக்கான புதிய சட்ட அமைப்பு ஒன்று.
* வருடாந்த தகவல் தொழில்நுட்ப வருமானத்தை 5 பில்லியன் அ.டொலர்களாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை…
* முதியோர் கொடுப்பனவு 5 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிப்பு.
* சிறுநீரக கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிப்பு.
*பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்..
*அதில் 2,000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும். மீதி 3,000 ரூபாய் அவர்களில் சட்டரீதியான பாதுகாவலருக்கு வழங்கப்படும்…
*இதற்காக 2025 வரவு செலவு திட்டத்தில் 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக 7,583 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு…
* தோட்ட வீட்டு அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திற்காக 4,268 மில்லியன் ரூபாவும், மலையக தமிழ் இளைஞர்களில் தொழிற்பயிற்சி உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 2,450 மில்லியன் ரூபாவும் மற்றும் மலையக பாடசாலைகளின் மற்றும் டிஜிட்டல் வகுப்பறை அபிவிருத்திக்காக 866 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு..
* குறைந்த வருமானம் பெறும் தரம் 5 மாணவர்களுக்கான கொடுப்பனவை 750 ரூபாயிலிருந்து 1,500 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* விளையாட்டு பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர போசாக்கு உணவு உதவித்தொகையை 5,000 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக ஆக உயர்த்தப்படும்.”
* தொழில்கல்வி பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை 4,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவாக உயர்த்தப்படும். இதற்காக ரூ.200 மில்லியன் ஒதுக்கப்படும்.”
* மகாபொல புலமைப்பரிசில் 5,000 ரூபாவிலிருந்து 7,500 ரூபாவாக உயர்த்தப்படும், அதே நேரத்தில் புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் 4,000 ரூபாவிலிருந்து 6,500 ரூபாவாக உயர்த்தப்படும். இதற்காக 4,600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கொடுப்பனவுகள் ஏப்ரல் முதல் வழங்கப்படும்.”
* திருகோணமலையில் மீதமுள்ள 61 எண்ணெய் தொட்டிகளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட எண்ணெய் தொட்டிகளைப் பயன்படுத்தி மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்.”
* அதற்காக சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறுவனத்துடனும் இணைந்து பணியாற்ற நடவடிக்கை..
அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு…
* அரச ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் 24,250 ரூபாவில் இருந்து 40,000 வரை 15,750 ரூபாவால் அதிகரிக்கப்படும்…
* சம்பள அதிகரிப்பிற்கு மேலதிகமாக வருடாந்த சம்பள அதிகரிப்பு 80 சதவீதத்தால் அதிகரிக்கப்படும்.
* அதன்படி, 250 ரூபாய் என்ற குறைந்தபட்ச வருடாந்த சம்பள அதிகரிப்பு 450 ரூபாய் வரை அதிகரிக்கப்படும்… 900 ரூபாய் என்ற சம்பள அதிகரிப்பு 900 ரூபாய் வரை அதிகரிக்கப்படும்.
* இந்த சம்பள அதிகரிப்பை கட்டம் கட்டமாக செயற்படுத்த முன்மொழியப்படுகிறது.
* முதல் கட்டமாக 5000 ரூபாய் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும்.
* இரண்டாவது கட்டமாக 2026 ஏப்ரல் மாதம் முதல் 30 சதவீதம் அதிகரிக்கப்படும்.
* மூன்றாம் கட்டமாக எதிர்வரும் 2026 ஆம் ஆண்டும் மற்றும் 2027 ஆம் ஆண்டும் ஜனவரி மாதங்களில் 35 சதவீமாக அதிகரிக்கப்படும்.
* அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட சம்பள அதிகரிப்பிற்காக 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்ய எதிர்ப்பார்க்கபடுகிறது.
* இதேவேளை, அரச துறையில் உள்ள அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்ப 30,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
* இதற்காக, 2025 ஆம் ஆண்டில்10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
* தனியார் ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு.
* தனியார் ஊழியர்களுக்கான தற்போது காணப்படும் 21,000 ரூபாய் என்ற குறைந்தபட்ச சம்பளத்தை 2025 ஏப்ரல் முதல் 27,000 ரூபாவாகவும் 2026 ஆண்டு முதல் 30,000 ரூபாவாகவும் அதிகரிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போது முன்மொழியப்பட்டுள்ள 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உறுதியளிக்கிறது.
* 01.01.2020 க்கு முன்னர் ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியங்கள், பொது நிர்வாக சுற்றறிக்கை எண் 1 இன் படி, 2020 ஆம் ஆண்டுக்கு பொருந்தக்கூடிய சம்பள அளவுகளின் அடிப்படையில் மூன்று கட்டங்களாக திருத்தப்படும்…
* ஜனாதிபதியின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரை நிறைவு…