லிபியாவில் உடைந்த அணைக்கட்டு – வெளிவந்தது 25 ஆண்டு கால இரகசியம்
லிபியாவில் 2 அணைக்கட்டுகள் உடைந்து பல்லாயிரம் உயிர்களை காவு கொண்ட நிலையில் முக்கிய இரகசியம் ஒன்று வெளிவந்துள்ளது.
அதற்கமைய, உடைந்த அணைக்கட்டுகள் 25 ஆண்டுகள் முன் ஏற்பட்ட விரிசல்கள் சீர்செய்யப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
Daniel புயல்காற்று தாக்கியபோது அணைக்கட்டுகள் உடைந்ததில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அணைக்கட்டுகள் ஏன் உடைந்தன என்பது விசாரிக்கப்படுகிறது.
உடைந்த இரண்டு அணைக்கட்டுகளும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இரண்டுமே 1970களில் கட்டப்பட்டவை. சம்பவம் நேர்ந்தபோது குடியிருப்பாளர்களுக்கு முறையான தகவல்கள் கொடுக்கப்பட்டதா என்ற கேள்விகளும் இப்போது முன்வைக்கப்படுகின்றன.
(Visited 33 times, 1 visits today)