ஈராக்கில் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய இராணுவ வீரர்கள் – நினைவுச்சின்னம் திறப்பு
ஈராக்கில் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய இராணுவ வீரர்கள் மூவரை நினைவுகூர, டாம்வொர்த்தில் (Tamworth) ஒரு புதிய நினைவுச்சின்னம் திறக்கப்படுகிறது.
இந்த நினைவுச்சின்னம் டாம்வொர்த் கோட்டையின் மைதானத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி அன்று திறக்கப்படுகிறது.
இவர்களுடன் பணியாற்றிய அந்தோனி ஃப்ரித் (Anthony Frith), நினைவுச்சின்னத்திற்காக சுமார் £50,000 பவுண்டுகள் நிதி திரட்டியுள்ளார்.
நினைவுச்சின்னத்தை மான்செஸ்டரில் (Manchester) உள்ள கலைஞர் ஜோஹன்னா டோம்கே-குயோட் (Johanna Domke-Quayote) வடிவமைத்தார்.
இது மூன்று வீரர்களின் கதைகளை பிரதிபலிக்கும், 91 செ.மீ உயரம் கொண்ட வெண்கல சிலையாகும். QR குறியீடு மூலம் அவர்கள் பற்றிய கூடுதல் தகவல் பார்வையாளர் பார்க்க முடியும்.
இது “இழந்தவர்களின் வாழ்க்கையை நினைவூட்டும் ஒரு சக்திவாய்ந்த படமாகும்,” மேலும் பார்வையற்றவர்களுக்கும் தொடுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதென டோம்கே-குயோட் தெரிவித்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம், அல் அமராவில் இடம்பெற்ற வீதியோர வெடிகுண்டு தாக்குதலில் அவர்கள் உயிரிழந்தனர்.





