ஐரோப்பா

ட்ரோன்களை சுட்டு வீழ்த்த பிரித்தானிய இராணுவத்தினருக்கு அனுமதி!

இராணுவ தளங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த பிரித்தானிய இராணுவத்தினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி (John Healey) நேற்று ஆற்றிய உரையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்படும் பிரித்தானியாவின் நான்கு விமான தளங்கள் ட்ரோன் பார்வைகளை எதிர்கொண்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அதே நேரத்தில் பல ஐரோப்பிய நாடுகளின் வான்வெளியில் ட்ரோன்கள் ஊடுறுவியிருந்தன. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த சவால்களை அந்நாடுகள் எதிர்நோக்கியிருந்தன. இதனைத் தொடர்ந்தே புதிய அறிவிப்பு வந்துள்ளது.

இந்நிலையில் புதிய அதிகாரங்கள் இராணுவ தளங்களுக்கு மட்டுமே பொருந்தும், ஆனால் விமான நிலையங்கள் போன்ற பொதுமக்கள் பயன்படுத்தும் தளங்களுக்கும் விரைவில் நீட்டிக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

(Visited 4 times, 4 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்